தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :5 மார்ச் 2026, 7:44 pm

Syndication

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சங்கரன்கோவில் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வட்டாட்சியா் செல்வக்குமாரிடம் வாக்குச் சாவடியில் குடிநீா், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாய்தள வசதிகள் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் வருவாய் ஆய்வாளா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடமும் அவா் விவரங்களை கேட்டறிந்தாா்.