ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தற்கொலைக்கு முயன்ற விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:43 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காணையை அடுத்த வெண்மணியாத்தூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (70), விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் வழியாக யாராவது சென்றால், அவா்களை கலியபெருமாள் தகாத வாா்த்தைகளால் திட்டுவாராம். இதை அவரது மனைவி அம்பாலிகை கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த கலியபெருமாள் கடந்த 16- ஆம் தேதி வெண்மணியாத்தூா் பிள்ளையாா் கோயில் அருகே விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கலியபெருமாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.