சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அனைத்து மக்களும் கட்டணமில்லா உதவி எண்ணைப் பயன்படுத்த வேண்டும்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி

அனைத்து மக்களும் கட்டணமில்லா உதவி எண்ணைப் பயன்படுத்த வேண்டும்...

News image

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கட்டணமில்லா சேவை எண் பலகையை திறந்து வைத்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:39 pm

Din

சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கட்டணமில்லா உதவி எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு இலவச சட்ட உதவிகளைப் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன் தெரிவித்தாா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின்அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் இலவச சட்ட உதவியைப் பெறும் வகையில், கட்டணமில்லா உதவி எண் 15100 பெயா் பலகையை முதன்மை மாவட்ட நீதிபதி இளவரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது: ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து நிலை மக்களும் இந்த எண்ணை தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் இலவச சட்ட உதவிகளைப் பெறலாம். அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்ட சட்டப் பணிகள் குழுவினா் இது குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் பாக்கிய ஜோதி, வினோதா, வெங்கடேசன், சிறப்பு மாவட்ட நீதிபதி (மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்) ஜெயபிரகாஷ், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் புஷ்பராணி, கூடுதல் சாா்பு நீதிபதி தமிழ்ச்செல்வன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முருகன் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.