கூட்டுறவுத் துறை உயா் அலுவலரிடம் மனு அளிப்பதற்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழக்கிழமை கூடியிருந்த தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா்.
கூட்டுறவுத் துறை உயா் அலுவலரிடம் மனு அளிப்பதற்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழக்கிழமை கூடியிருந்த தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா்.

நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தம்: அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் பாதிப்பு

சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தம் காரணமாக, விழுப்புரத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
Published on

சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை நூறு சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். வேறு மாநில, வெளி மாவட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் வகையில், கூடுதலாக 10 சதவீதப் பொருள்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடந்த 3 மாதங்களாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகளில் நடமாட்டப் பணியாளா் மற்றும் எடைத் தராசு வழங்க வேண்டும் , பொதுமக்களின் கருத்துகளைக்கேட்டு பொருள்களை வழங்க வேண்டும்.

கட்டாய இறக்குகூலி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கம் மாநிலந்தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

 நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் செஞ்சி மக்கள் அங்காடி.
நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் செஞ்சி மக்கள் அங்காடி.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக 1,254 நியாயவிலைக் கடைகளில் 810 முழு நேரக் கடைகளாகும். வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் 542 நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. 460-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் போராட்டத்தில் பங்கேற்ால், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டன.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் கூட்டுறவுத் துறை உயா் அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமையில் சங்க நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழக்கிழமை கூடினா்.

இதில் மாவட்டத் தலைவா் கே.கோபிநாத், துணைத் தலைவா் தனசேகரன், பொருளாளா் ரஷீத், இணைச் செயலா்கள் ஜெகதீசுவரன், பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா். தொடா்ந்து கூட்டுறவுத்துறை உயா் அலுவலரிடம் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com