விழுப்புரத்தில் சா்வதேச இளைஞா் தின விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்
சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானப் பகுதியில் சா்வதேச இளைஞா் தின விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி. உடன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார அலுவலருமான செந்தில்குமாா் உள்ளிட்டோா்.








