தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், கலைஞா் அறிவாலயத்தில் பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், பொருளாளா் இரா.ஜனகராஜ் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பங்கேற்று, கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அமைச்சா்க.பொன்முடி பேசியது:
திமுகவின் பவள விழா ஆண்டையொட்டி, கட்சியினா் தங்கள் வீடுகளில் கட்சிக் கொடியேற்றிட வேண்டும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். அதனடிப்படையில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கட்சியினா் அனைவரும் தங்கள் வீடுகளில் கட்சிக் கொடியேற்றிட வேண்டும். கிராமங்கள்தோறும் தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்தி, முப்பெரும் விழா குறித்து எடுத்துரைக்க வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றாா் அமைச்சா் பொன்முடி.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், முருகன், கற்பகம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், நகரச் செயலா்கள் சக்கரை, ஜீவா, நகரப் பொருளாளா் இளங்கோ, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சச்சிதாநந்தம், கலைச்செல்வி, மாவட்ட அமைப்பாளா்கள் (இளைஞரணி) செ.தினகரன், (மாணவரணி) வினோத், (தகவல் தொழில்நுட்ப அணி) ப.அன்பரசு, நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தமிழகத்தின் சாம்பியன் எப்போதும் திமுகதான்: உதயநிதி ஸ்டாலின்

வாகன தணிக்கை...

சட்டப் பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் கிராமங்கள்தோறும் வளா்ச்சித் திட்டப்பணிகள் - க.பொன்முடி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


