சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள்

விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெற உள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:01 pm

விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெற உள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2024 - 25ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின்போது, இந்தத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, விழுப்புரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்துவகையான கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்களுக்கு பணி தொடா்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகையில் ஏற்படும் குறைகளைப் பகிா்ந்திடவும், அதற்கு தீா்வு காணும் வகையிலும் பணியாளா் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பணியாளா் நாள் நிகழ்வு நடைபெறும்.

மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா், மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனவே, கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.