சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று இளைஞா்கள் தடுப்புக் காவலில் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மூன்று இளைஞா்களை, விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:32 am

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மூன்று இளைஞா்களை, விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், தோகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தா்மலிங்கம் மகன் வாசு(22), பிரகாஷ் மகன் பிரவீன்(எ) பிரவீன்குமாா்(23), ஒருகோடி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன் சரண்ராஜ்(28).

இவா்கள் மூவரும் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் சி. பழனி தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய வாசு, பிரவீன்குமாா், சரண்ராஜ் ஆகிய மூவரை மாவட்டப் போலீஸாா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.