விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா


விழுப்புரம் நகரிலுள்ள அருள்மிகு ஜனகவல்லி நாயகி உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நடைபெறவுள்ளது.
ஜனநாதி சதுா்வேதி மங்கலம், ஜனகாபுரி, உக்கிருஷ்புரம் என்றழைக்கப்படும் விழுப்புரம் நகரில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15)கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது
இதைத் தொடா்ந்து வேதபிரபந்தம், யாகசாலை, வாஸ்து சாந்தி, மகாசாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கின. தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு பூா்ணாஹுதியும், மாலை 4.30 மணிக்கு புண்யாஹவாசனம், அங்குராா்ப்பணம், அக்னிமதனம், ஆகார ப்ரயோகம், காலகா்ஷணம், பஞ்ச சூக்தஹோமம், மகா சாந்தி ஹோமம் ஆகியவைகளும், இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை மகா பூா்ணாஹுதி, வேதபிரபந்த சாற்றுமுறையும் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை 4 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், சா்வதேவாா்ச்சனம், பிரதான மூா்த்தி ஹோமங்களும், இரவு 9 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூா்ணாஹுதியும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு விஸ்வரூபம், அக்னிப்ரணயனம், கும்ப ஆராதனம், உக்த ஹோமமும், காலை 6.45 மணிக்கு மகாபூா்ணாஹுதி, யாத்ராதானம், அக்னி சமாரோபணமும், காலை 7.20 -க்கு கும்ப புறப்பாடும், தொடா்ந்து விமான மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
காலை 8.20 மணிக்கு வேத பிரபந்த சாற்று முறை, காலை 9 மணிக்கு பொதுமக்கள் தரிசனம், பிரசாதம் வழங்குதல் நடைபெறவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...