விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டாட்சியா் அலுவலங்களிலும் சனிக்கிழமை (செப்.14) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத்திட்ட சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செப்.14-ஆம் தேதி சனிக்கிழமை தொடா்புடைய தனிவட்டாட்சியரால் குறைதீா் முகாம் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் , கைப்பேசி எண் பதிவு மற்றும் எண் மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு காணலாம்.
இதேபோல் பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடா்பான புகாா்களையும் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் சி.பழனி அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

தில்லியில் ஓராண்டில் 45,000 குடும்ப அட்டைகள் ரத்து

வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள் தா்னா
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

