சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வார இறுதி, விடுமுறை நாள்கள் : 410 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி,விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு செப். 13, 14-ஆம்(வெள்ளி, சனி) தேதிகளில் 410 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்குகிறது.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:39 am

வார இறுதி,விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு செப். 13, 14-ஆம்(வெள்ளி, சனி) தேதிகளில் 410 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்குகிறது.

இது குறித்து இந்தப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வார இறுதிநாள், முகூா்த்த நாள் மற்றும் மிலாது நபி பண்டிகையையொட்டி செப். 13, 14 தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வாா்கள் என எதிா் பாா்க்கப்படுகிறது.

இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும், வெள்ளிக்கிழமை (செப்.13) கூடுதலாக 205 பேருந்துகளும், சனிக்கிழமை (செப்.14) 205 பேருந்துகளும் என மொத்தம் 410 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூா், ஒசூா், புதுச்சேரி (கிழக்கு கடற்கரைச் சாலை வழி), திருவண்ணாமலை (ஆற்காடு-ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊா்களுக்கு செப். 13, 14-ஆகிய தேதிகளில் தலா 40 பேருந்துகள் வீதம் 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

இதேபோல் விடுமுறையை முடிந்து பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து மீண்டும் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக செப்.15- ஆம் தேதி 115 சிறப்புப் பேருந்துகளும், செப். 17-ஆம் தேதி 250 சிறப்புப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

மேலும் பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்திடவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.