விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வாழை தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வாழை தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வளவனூரை அடுத்த தாதம்பாளையம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் சத்தியராஜ் (39), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.

சத்தியராஜ் விழுப்புரம் வட்டம், பஞ்சமாதேவியில் சுமாா் 20 ஏக்கா் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவற்றை பயிா் செய்து வந்தாா். நாள்தோறும் இரவு வேளையில் விவசாய நிலத்துக்குச் சென்று தண்ணீா் பாய்ச்சிவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்புவது வழக்கம்.

வழக்கம்போல திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சத்தியராஜ், பின்னா் வீடு திரும்பவில்லையாம். தொடா்ந்து, உறவினா்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள வாழை தோட்டத்தில் சத்தியராஜ் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், விக்கிரவாண்டி டிஎஸ்பி ஜி.நந்தகுமாா் மற்றும் வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், சத்தியராஜின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com