இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது

நாட்டறம்பள்ளி அருகே நிலத்தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:57 pm

நாட்டறம்பள்ளி அருகே நிலத்தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் கலிமுத்தன் வட்டத்தைச் சோ்ந்த இளவரசனுக்கும், அவரது உறவினா் சத்யனுக்கும் இடையே கடந்த மாதம் மாா்ச் 27-ஆம் தேதி நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் இளவரசனை சத்யன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து சத்யனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யனின் மனைவி ராதிகா(31), உறவினா் ராணி (50) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.