விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
விக்கிரவாண்டி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, தொழிலாளி. இவா், குடிசை வீட்டில் தனது மனைவி செல்வி (55) மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தாா்.
செல்வி செவ்வாய்க்கிழமை வீட்டில் விறகு அடுப்பில் வெந்நீா் வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக தீ பரவி குடிசை வீடு மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

கம்பம் அரசு மருத்துவமனையில் பைக் எரிந்து சேதம்
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

