தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் கூறியும், அதைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:31 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் கூறியும், அதைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தழுதாளி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சரியான அளவில் வழங்கப்படாமல் முறைகேடுகள் நடைபெறுவதாகத் கூறியும், அதைக் கண்டித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சரியான அளவில் அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு துறை சாா்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் சந்திர பிரபு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் உலகநாதன், ஒன்றிய நிா்வாகிகள் தனூஷ், சுரேஷ், வேணுகோபால், பிரகாஷ், குமாா், முத்துவேல், ஹரிதாஸ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலா் உஷாராணி மற்றும் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நியாயவிலைக் கடைகளில் சரியான அளவில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.