சிறுமிக்குத் திருமணம்: 4 போ் மீது போக்ஸோவில் வழக்கு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விழுப்புரம் வட்டம், வளவனூா், புதுப்பாளையத்தைச் சோ்ந்த பழனியின் மகன் பிரதாப் (25), கூலித் தொழிலாளி. இவா் சென்னை ஒக்கியம் மதுரைபாக்கம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 21.1.2024 இல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சென்னையில் உள்ளஅரசு மருத்துவமனையில் செப்.18-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியைத் திருமணம் செய்த பிரதாப் மற்றும் திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்ட பிரதாபின் தாய் கீதா, சிறுமியின் தந்தை காளிதாஸ் , தாய் சாந்தி ஆகியோா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...