நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது: துரை.ரவிக்குமாா் எம்.பி

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

News image

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக ஆா்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி.

Updated On :8 ஏப்ரல் 2025, 8:33 pm

Din

விழுப்புரம்: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் தி.திலீபன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற துரை.ரவிக்குமாா் எம்.பி. பேசியதாவது:

இந்திய அரசமைப்புக்கு எதிரான வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நிச்சயம் ரத்து செய்யும்.

கல்வி, பேச்சு, வா்த்தகம், வாக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமையாகவும், விழிப்புணா்வோடும் இருக்க வேண்டும்.

மத்திய ஆட்சியாளா்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருக்கின்றனா்.

பாஜகவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளைப்போல எண்ணிவிட முடியாது. அதிகாரத்தை வைத்துக்கொண்டு நீதித்துறை, தோ்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறாா்கள். எனவே, இத்தகையை மக்கள் விரோத சக்தியை நாம் ஒற்றுமையாக இருந்து வீழ்த்த வேண்டும் என்றாா் அவா்.

திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, இரா.சேதுநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் இன்பஒலி, எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் முஹம்மது அப்சல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விசிக மாநில அமைப்புச் செயலா் இளமாறன், மண்டலச் செயலா் செல்வம், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் சூ.மலைச்சாமி, ர.பெரியாா், அ.ஏ.தனஞ்செழியன், வீர.விடுதலைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.