தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரத்தை அடுத்த மரகதபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 7:22 pm

Din

விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த மரகதபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.