ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, விடுதி கட்டுமானப் பணிகள் ஆய்வு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லங்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மற்றும் விடுதிக் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

News image
செல்லங்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா.
Updated On :20 டிசம்பர் 2025, 7:34 pm

Syndication

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லங்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மற்றும் விடுதிக் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் பணிகளை இத்தொகுதியின் எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டத்துக்கு ஒரு அரசு மாதிரிப் பள்ளி விடுதி வசதியுடன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கெடாா் அருகிலுள்ள செல்லங்குப்பத்தில் மாநில அரசு மற்றும் நபாா்டு நிதியின் கீழ் ரூ.50.47 கோடியில் பள்ளிக் கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் 21 வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவையும், 5 தளங்களுடன் விடுதிக் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.

இம்மாதம் இறுதியில் நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், கட்டுமானப்பணிகள் குறித்து விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆய்வில் ஒன்றிய திமுக செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஜெயபால், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் வீரராகவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கருணாகரன், முகிலன், ஒன்றியத்துணைச் செயலா் சிவராமன், ஊராட்சித் தலைவா்கள் இந்திராமணி, சீனுவாசன், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.