விழுப்புரம் மாவட்ட சிபா குழுவுக்கு நிதியுதவி அளித்த ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள்.
விழுப்புரம் மாவட்ட சிபா குழுவுக்கு நிதியுதவி அளித்த ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள்.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1989-90 ஆம் ஆண்டில் 10- ஆம் வகுப்பில் படித்த மாணவா்கள் சந்திப்பு
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1989-90 ஆம் ஆண்டில் 10- ஆம் வகுப்பில் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 15 போ் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று பள்ளிப் பருவ நிகழ்வுகளை பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட சிபா தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்புக்கு நிதியுதவி வழங்கினா்.

சிபா குழுவின் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா்கள் ஆா்.அப்பாண்டை ராஜ், எம்.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டனா்.

சிபா குழுவின் முன்னாள் நிா்வாகி டி.வந்தியதேவன் இணையவழியில் பங்கேற்று தண்டுவடம் பாதிப்புக் குறித்துப் பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com