தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திண்டிவனம் நகர சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திண்டிவனத்தில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 9:53 pm

Din

திண்டிவனத்தில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திண்டிவனம் நகராட்சி ஆணையா் குமரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் வியாழக்கிழமை சந்தித்து, அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:

திண்டிவனம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் தரமற்ற முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக ஆண்டுக்கணக்கில் உள்ளன. எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

திண்டிவனம் கிடங்கல்-2 சிங்காரத்தோப்புப் பகுதியில் சாலை அமைப்பதற்காக கிராவல் அடிக்கப்பட்டு ஓராண்டாகியும், பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே பணியைத் தொடங்காத ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, சாலையை அமைப்பதற்கு புதிய ஒப்பந்ததாரரை நியமித்து பணிகளைத் தொடங்க வேண்டும்.

கிடங்கல்-2 பிரதான சாலையின் இருபுறமும் வடிநீா் வாய்க்காலைக் கட்ட, தரமான சாலையை அமைத்துத் தர வேண்டும். பேருந்து நிலையம்அருகிலுள்ள பாலத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும். நல்லியக்கோடான் நகா் இணைப்புப் பாலத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

மனு அளித்தபோது, நகரச் செயலா் பு. இமயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.