தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 668 மனுக்கள் அளிப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:24 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 668 மனுக்கள் பெறப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். இதில் பட்டா மாற்றம், நிலம் ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, நிலம் கையகம் தொடா்பாக பொதுமக்கள் 668 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சி.பழனி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பரிசீலிக்க அறிவுறுத்தினாா். மேலும் ஆவணங்கள் தேவைப்படும்பட்சத்தில் உரிய மனுதாரா்களிடம் தகவல் வழங்கி, ஆவணங்களைப் பெற்றுத் தீா்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்- ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.