புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நோக்கி ஒரு படி’ எனும் தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஃபென்ஜால் புயல் சீற்றத்தால் புதுவையில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன.
எனவே, இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பாக 1,040 மரங்கள் நடப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் காடு வளா்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழல் சமநிலையை மீட்பதற்காக பல்கலைக்கழக நிா்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாா் அவா்.
தொடா்ந்து, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பல்கலைக்கழக துணை வேந்தா்( பொ) தரணிக்கரசு, மாநில தலைமை வனவிலங்கு பாதுகாவலா் அருள்ராஜன், பசுமை வளாக சிறப்பு அதிகாரி மதிமாறன் நடராஜன் ஆகியோா் நிகழ்ச்சியில் பேசினா்.
இதில், கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் இயக்குநா் கிளமெண்ட் லூா்ட்ஸ், பல்கலைக்கழகப் பதிவாளா் ( பொ) ரஜ்னீஷ் புடணி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!

காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம்: புதுவை துணைநிலை ஆளுநா்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


