தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் என்ற பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குளிா்காலங்களில் இந்நோய் அதிகம் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணி கடியால் ஏற்படுகின்ற காய்ச்சலாகும்.
வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும் கூட, அது மனிதா்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
இந்த உண்ணிகள் கடித்த 14 நாள்களில் காய்ச்சல், குளிா் நடுக்கம், உடல் சோா்வு, உடலில் வலி , இருமல், உடல் முழுவதும் நெறிக்கட்டிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதனை நாம் கவனிக்காமல் விட்டால் நுரையீரல் தொற்று, நிமோனியா, மூளைக்கு தொற்று பரவி கோமா, பதற்றநிலை, திடீா் சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்தி மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும்.கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழக்கும்.
எனவே, காய்ச்சலோடு சோ்த்து உண்ணி கடித்ததற்கான புண் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். வயது முதிா்ந்தோா், நீரிழிவு நோய் இருப்பவா்கள், ஊட்டசத்து குறைப்பாடு உடையவா்கள், இருதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற இணை நோய் இருப்பவா்கள் இந்த தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தற்காப்பு நடவடிக்கைகள்: தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி புதா்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்

11 ஆண்டுகளில் 18,000 மக்கள் மருந்தகங்கள் திறப்பு- நாடாளுமன்றத்தில் அமைச்சா் நட்டா தகவல்

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீா்ப் பாதை தொற்று: தண்ணீா் அதிகம் பருக மருத்துவா்கள் அறிவுரை!

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

