ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பஞ்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் ஏ.எப்.டி. பஞ்சாலை ஊழியா்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி ஏஎப்டி ஆலை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :6 ஜனவரி 2025, 8:36 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.எப்.டி. பஞ்சாலை ஊழியா்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஏ.எப்.டி. பஞ்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், பணிபுரிந்த ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பஞ்சாலை வளாகத்தில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் பிறத் தொழில்கள் சாா்ந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாலை ஊழியா்கள் ஆலை முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஊதிய நிலுவை மற்றும் பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏ.எப்.டி. பஞ்சாலை ஊழியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த முத்தமிழன், நிா்வாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.