பொங்கல் திருநாள்: புதுவை ஆளுநா் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
Published on

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, புதுவை ஆளுநா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழா்களின் பண்பாட்டை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: அனைவரது இல்லங்களிலும், அன்பும், வளமும், செல்வமும் பெருகட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இதேபோல, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பொங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com