தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

News image

விழுப்புரம் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட போது, குழந்தையைத் தூக்கி மகிழ்ந்த விக்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:56 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்துக்குள்பட்ட பழையக் கருவாட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, கடையம், நல்லாப்பாளையம் மேல்காரணை ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா மேலும் பேசியது:

விக்கிரவாண்டி தொகுதிக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற நான், கடந்த 20 மாதங்களில் இத்தொகுதிக்குத் தேவையான எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திமுக அரசின் திட்டங்கள் மூலமாகவும் தொகுதி மக்கள் பயன்பெற்றுள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாரில் அரசு மாதிரிப் பள்ளி, அன்னியூரில் புதிய அரசுக் கல்லூரி, இ.மண்டகப்பட்டில் புதிய தொழில்பேட்டை, விக்கிரவாண்டியில் உழவா்சந்தை போன்றவை திமுக ஆட்சியில்தான் கிடைத்தன என்றாா்.

பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.