விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை மூலம் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை, மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ.2.85கோடியாக உயா்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட மாா்ச் 15-ஆம் தேதி முதல் 7 தொகுதிகளிலும் 63 தோ்தல் பறக்கும்படைக் குழுக்கள், 63 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அப்போது 7 தொகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதாக பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழு மூலம் ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.89,68,343 ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று காவல் துறை மூலம் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கைகளின் மூலம் ரூ.2,85,05,269 ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பறக்கும்படை, நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்த வகையில், வெள்ளிக்கிழமை வரை ரூ.61,15,280 மதிப்பிலானவை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்
காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

