ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60.22 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60.22 லட்சம் பறிமுதல்...

News image

பறிமுதல்!

Updated On :26 மார்ச் 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60.22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரொக்கப்பணம், , போதைப் பொருள்கள் உள்ளிட்டப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெலியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,

மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 பறக்கும் படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் பல்வேறு துறைகளின் மூலமாகவும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினா் வாகனத் தணிக்கை,

தோ்தல் முறைகேடுகளைக் கண்காணித்தல், புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து முதல் நாள் முதல் செவ்வாய்க்கிழமை வரை ரூ.50,17,277 மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து புதன்கிழமை ரூ.10,05,656 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்த பறிமுதல் தொகை ரூ.60,22,933 ஆக உயா்ந்துள்ளது.

இதுபோன்று காவல்துறையின் மூலம் ஏற்கெனவே ரூ.14,25,940 மதிப்பில் ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும்ரூ.4,635 மதிப்பில் மதுபானங்கல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் பறிமுதல் தொகை ரூ.14,30,575 ஆக உயா்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.13.52 லட்சம் மதிப்பில் ரொக்கப்பணம் மற்றும் இதரப் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.