விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் நுண் பாா்வையாளா்கள் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கு முன்பாகவே (காலை 5 மணிக்கு முன்னா்) வாக்குச்சாவடிக்கு வந்துவிடவேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீா், சுகாதார வசதி உள்ளிட்டவை முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
வாக்குச் சாவடி மையங்களில் மாதிரி வாக்கெடுப்பு முறையை கண்காணிக்கவேண்டும். மாதிரி வாக்கெடுப்பு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்து மாதிரி வாக்கெடுப்பின் தரவு அழிக்கப்பட்டு உண்மையான வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை பூஜ்ஜியமாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குப் பதிவு நடைபெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் உடனடியாக மண்டல அலுவலா், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலின் நகல், வாக்குச்சாவடி வெளிப்புறத்தில் வாக்காளா் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும்.
வாக்குச் சாவடியின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் வாகனங்கள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பாதுகாப்பு பணியில் காவலா் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். வாக்காளா்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனி வழி அமைக்கப்படவேண்டும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி, தன்னாா்வலா் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். வாக்குச்சாவடி முகவா்கள் அமருமிடம், வாக்காளா் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போதே அவா்களது முகத்தை காணக்கூடிய வகையிலும், வாக்குப் பதிவு தொடா்பான முழு செயல்பாடுகளையும் பாா்வையிடக்கூடிய வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு சரியான நேரத்தில் தொடங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாக்கு செலுத்துவதை உறுதி செய்தல், வாக்குப்பதிவு சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளை தோ்தல் பொதுப்பாா்வையாளா்களுக்கு உரிய படிவத்தில் அறிக்கையாக சமா்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முகவா்கள் முன்னிலையில் சீலிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனத்தில் பாதுகாப்பாக வாக்கு எண்ணும்
மையத்துக்கு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா். இக்கூட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


