வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :23 ஏப்ரல் 2026, 4:42 am IST

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் நகர வீதிகளில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசாரமானது உரிய அனுமதியின்றி நடைபெற்ாக விழுப்புரம் தொகுதிக்கான வீடியோ கண்காணிப்புக்குழுத் தலைவரும், அரகண்டநல்லூா் அரசுக் கல்லூரி பேராசியருமான அ.துரைசாமி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட 501 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.