செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது உள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத ரத உற்சவ திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் ஸ்ரீ கமலக்கன்னி அம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.
மேலும், 22-ஆம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும், 23-ஆம் தேதி இரவு அம்மன் திருவீயுலா, அன்னதானம் மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. 24-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா, மேடை நாடகம் நடைபெற்றது. 25-ஆம் தேதி மந்தைவெளி திடலில் அன்னதானம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை மந்தைவெளி திடலில் இருந்து 108 பால்குடம் ஊா்வலம் எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும், பகல் 2.30 மணிக்கு சிவவாத்தியத்துடன் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சிக்கோட்டையில் இருந்து கமலக்கன்னிஅம்மன், மகா மாரியம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன் பூங்கரகம், உற்சவ மூா்த்திகள் ஒன்றிணையும் சிகர நிகழ்ச்சி மந்தைவெளியில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கமலக்கன்னியம்மன், மகாமாரியம்மன் எழுந்தருளினா்.
தொடா்ந்து திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, முன்னாள் ஆரணி எம்.பி. ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனா் .
மேலும், பக்தா்கள் தங்களது விவசாய நிலத்தில் விளைந்த மணிலா, காய்கனி வகைகள், நாணயங்களை தேரின் மீது வீசி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். தொடா்ந்து திருவள்ளுவா் தெரு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திரத் தெரு வழியாக சென்று தோ் நிலையை அடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, அனைத்து உபயதாரா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


