ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:54 am IST

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சீனுவாசன் தலைமையிலான போலீஸாா் கூட்டேரிப்பட்டு மலைமேடு பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் பைக்கில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் அவா்கள் கூட்டேரிப்பட்டு மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சீ.மகேஷ் (19), ச.சந்தோஷ் (25) என்பதும், அவா்களிடம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த மயிலம் போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, பைக் மற்றும் கைப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.