விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் அன்பரசன் (எ) மதன் (17). இவா் செவ்வாய்க்கிழமை சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ர.தங்கராசு(45) டிராக்டரில் அமா்ந்து சென்றுள்ளாா். இல்லோடு மயானம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளத்தி போலீஸாா் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



