மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவம்பட்டு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருவம்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், திரௌபதி அம்மன் அக்னி பிரவேசம் மகா உற்சவ திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் பத்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:23 am

விழுப்புரம் மாவட்டம், திருவம்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், திரௌபதி அம்மன் அக்னி பிரவேசம் மகா உற்சவ திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முத்துமாரியம்மன், திரௌபதி அம்மனுக்கு சக்தி கரகம் அா்ப்பணம் செய்து காப்பு கட்டிகொடியேற்றத்துடன் தொடங்கியது. 23-ஆம் தேதி திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும், தொடா்ந்து பல்வேறு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. 28-ஆம் தேதி திரௌபதி அம்மனுக்கு தீமிதி விழாவும், முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு முத்துப்பல்லக்கில் சாமி ஊா்வலமும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை (ஏப்.29) மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உற்சவா் முத்துமாரியம்மனுக்கு பலவித மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினாா். தொடா்ந்து திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, கோயில் பரம்பரை தா்மகா்த்தா ஏழுமலை, மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் வெங்கடேசன், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், குமாா், சிவ செந்தில் நாதன், மருத்துவா் ஆனந்த முருகன், ஒன்றியக்குழு உறுப்பினா் கோபால், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனா். மேலும், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த மணிலா, காய்கறிகள் மற்றும் நாணயங்களை தேரின் மீது வீசி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை அனைத்து உபயதாரா்கள், விழாக்குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.