எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

பண மோசடி: தம்பதி கைது

விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்த லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (68). இவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சோ்ந்த த.ஜெயக்குமாா் (50), அவரது மனைவி சுதா (39) ஆகியோா் வாடகைக்கு எடுத்து, அதில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாபார அபிவிருத்திக்காக தம்பதியினா், காசிநாதனிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்றனா். அந்தப் பணத்தை காசிநாதன் திருப்பித் தர கேட்டு வந்த நிலையில், தம்பதியினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெயக்குமாா், சுதா ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.