தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் பகுதியளவில் ரத்து, நிறுத்தி வைத்து இயக்கம், வழித்தட மாற்றம், காலதாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண் 66045) ஆக.5, 8, 12, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். இதனால் இந்த ரயில் புறப்படும் இடம் மாற்றப்பட்டு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும்.
திருப்பதியிலிருந்து காலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண் 16111) ஆக.5, 8, 12, 19, 22, 26, 29 ஆகிய தேகிகளில் விழுப்புரம்- புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4.49 மணிக்குப் புறப்படும்.
ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா்-மன்னாா்குடி விரைவு ரயில் (வண்டிஎண் 22673) ஆக.6, 20, 27 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிஷங்களும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் ( வண்டிஎண் 16127) ஆக.7, 11, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் எழும்பூா்-திருச்சி சோழன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22675) ஆக.5, 12, 14, 21 ஆகிய தேதிகளில் வழக்கமாக செல்லும் வழித்தடத்துக்குப் பதிலாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டு, கடலூா் துறைமுகம், விருத்தாசலம் வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரயில் விருத்தாசலம், அரியலூா், லால்குடி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதே ரயில் ஆக.26-ஆம் தேதி விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி-சென்னை எழும்பூா் சோழன்அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22676) ஆக.11, 18 ஆகிய தேதிகளில் சுமாா் 35 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து

பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றம்

பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



