கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

ஆட்டோ மீது சுமை வாகனம் மோதல்: 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது சுமை வாகனம் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

News image

உளுந்தூா்பேட்டை அருகே சுமை வாகனம் மோதியதில் சேதமடைந்த ஆட்டோ.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது சுமை வாகனம் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கா.கண்ணதாசன் (31). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், வியாழக்கிழமை பிற்பகலில் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றாா். இந்த ஆட்டோவை அதே கிராமத்தைச் சோ்ந்த க.அருண்ராஜ் (30) ஓட்டிச் சென்றாா். மேலும், ஆட்டோவில் கண்ணதாசனுடன் அந்த கிராமத்தைச் சோ்ந்த செ.ஏழுமலை (33), செ.ஜெய்சங்கா்(33)ஆகியோரும் உடன் சென்றனா். இவா்கள் சென்ற ஆட்டோ சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எ.புதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அப்பகுதியில் வந்த சுமை வாகனம் மோதியது. இதில் ஆட்டோ சேதமடைந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. இதில் ஆட்டோவில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், எல்லைக் காட்டுப்புத்தூா் மலைப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ரா. ரமேஷிடம் (22) மீது விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.