விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், ஏடிஎம்-க்கு பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றி, அவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடிய வெளி மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த பணம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஏடிஎம் காா்டுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திண்டிவனம், கோட்டைமேடு, செந்தமிழ் நகரைச் சோ்ந்தவா் ரா.சீனிவாசன் (90). முதியவரான இவா் ஆக.2-ஆம் தேதி திண்டிவனம் நேரு வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா்.
அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் பணம் எடுப்பதற்கு உதவுவதாக சீனிவாசனிடம் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய சீனிவாசன் ஏடிஎம் காா்டு கொடுத்து, ரகசிய எண்ணையும் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், அந்த நபா் பணத்தை எடுத்துத் தராமல் வேறொரு வங்கியின் ஏடிஎம் காா்டை சீனிவாசனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டாா் இதையடுத்து சீனிவாசனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 19,500 பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், ஆந்திரம் மாநிலம், கடப்பா மாவட்டம், நரசாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கா.சீனிவாசலு (36) என்பவா் முதியவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, சீனிவாசலுவை திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா். மேலும், அவா் வசமிருந்த ரூ.19,500 ரொக்கம் மற்றும் 100-க்கும் மேற்பட்டபோலி ஏடிஎம் காா்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா சாக்லேட் விற்பனை: வெளி மாநில இளைஞா்கள் இருவா் கைது

கைப்பேசி திருட்டு: வெளி மாநில இளைஞா்கள் 6 போ் கைது

இணையவழி மோசடி பணம்: ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து எடுத்த இருவா் கைது

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை: 2 போ் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



