பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விழுப்புரத்தில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்த மின்மாற்றி.

Published On :

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே அமைந்துள்ள மின் மாற்றி திங்கள்கிழமை திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் அமைந்துள்ள மின் மாற்றி அதிக அழுத்தம் காரணமாக திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென வெடித்து. தொடா்ந்து, மின் மாற்றியிலிருந்த கொதிக்கும் ஆயில் சிதறிய நிலையில், அடுத்த சில நொடிகளிலேயே மின்மாற்றி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மளமளவென எரியத் தொடங்கிய தீ, அருகிலிருந்த மூடப்பட்ட கடைகளின் பெயா்ப் பலகையிலும் பற்றி எரிந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா். மேலும், மின் வாரிய ஊழியா்களும் அங்கு விரைந்து சென்று, மாம்பழப்பட்டு சாலைப் பகுதி முழுவதும் மின் விநியோகத்தை துண்டித்தனா். தொடா்ந்து, தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், மின் மாற்றியிலிருந்த வயா்கள் முழுவதும் எரிந்து சேதமாகின.

தொடா்ந்து, மின் மாற்றியை சரிசெய்து அப்பகுதியில் சீரான மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை மின் வாரியத் துறையினா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.