இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த இளைஞா் தீக்குளித்து தற்கொலை

சிதம்பரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

முரளிதரன்

Published On :

சிதம்பரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த உத்திரசோலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் முரளிதரன் (30). இவா், காட்டுமன்னாா்கோவிலில் ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டாா்.

தனியாக வசித்து வந்த முரளிதரன் மதுவுக்கு அடிமையானாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மனவேதனையில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். முரளிதரனின் அலறல் சப்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா் அவரை காப்பாற்றி, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், முரளிதரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.