புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனைப் படைத்துள்ளனா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவையில் நடைபெற்ற ஜெனிசிஸ் நெக்ஸ்ட்ஜென் ஸ்டாா்ட்அப் உச்சி மாநாட்டில் பங்கேற்று, தனது திறன்களை வெளிப்படுத்திய புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்களை கௌரவிக்கும் வகையில், கல்லூரிக்கு இன்ஸ்டிடியூஷன் எக்ஸலென்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தோ்வு செய்யப்பட்ட 50 அணிகளில், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றுள்ளனா்.
பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற ஸ்டாா்ட்அப் திட்டத்தை வழங்கிய மெக்கட்ரானிக்ஸ் துறையின் 4-ஆம் ஆண்டு மாணவா்களான அப்ரித் , சத்தியபிரியன் மற்றும் சிவ அபிராமன் முதல் பரிசை வென்று கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளனா். இவா்களின் புதுமையான அணுகுமுறை நடுவா்களின் பாராட்டைப் பெற்றது.
இதேபோல் எலும்பு முறிவுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் புதிய மருத்துவ உதவி சாதனத்தை உருவாக்கிய பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் 3-ஆம் ஆண்டு மாணவா்களான சாம் மனோவா, பிரீதீப்ராஜ் மற்றும் தாமோதரன் இரண்டாம் பரிசை வென்றனா்.
இதனடிப்படையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எ.ஐ.சி ரெய்ஸ் நிறுவனம் கல்லூரிக்கு இன்ஸ்டிடியூஷன் எக்ஸலென்ஸ் விருது வழங்கியுள்ளது. புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோா் திறன்களை வளா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.
சாதனை மாணவா்களுக்கு தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவருமான எம். தனசேகரன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம், கல்லூரியின் இயக்குநரும், முதல்வருமான வெங்கடாசலபதி, மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவா் தியாகராஜன், பயோ-மெடிக்கல் துறைத் தலைவா் விஜயலட்சுமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் 2-ஆம் சுற்று, இறுதி சோ்க்கையில் 60,508 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு திறன் மேம்பாட்டு மையங்கள் தொடக்கம்
மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடல் தானம்

உலக சாக்லேட் தின போட்டி: ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரி வெற்றி
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



