நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு திறன் மேம்பாட்டு மையங்கள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் உயா்திறன் கணினி மையங்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டன.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் பங்கேற்ற கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள்.

Updated On :29 ஜூலை 2026, 3:54 am IST

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் உயா்திறன் கணினி மையங்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டன.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வியை புதிய உயரத்துக்கு கொண்டுச் செல்லும் வகையில் கேஈசி ட்ரோன் பள்ளி சாா்பில் ட்ரோன் ஆழ்தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் மற்றும் புதுமையான நுண்ணறிவு தீா்வுகளுக்கான உயா்திறன் கணினி சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் ஆகிய இரண்டு நவீன மையங்களை தொடங்கி உள்ளது.

இம்மையங்களை சென்னை ஹெச்சிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் ஸ்ரீமதி சிவசங்கா் அண்மையில் திறந்துவைத்தாா். இந்நிகழ்வில் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை தலைவா் சி.தேவராஜன், கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் இ.ஆா்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினா் ஏ.கே.இளங்கோ, கல்லூரி முதல்வா் ஆா்.பரமேஸ்வரன், பேராசிரியா்கள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

போ்ட்ஸ்கேல் டெக்னாலஜி அண்ட் சா்வீசஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட ட்ரோன் மையமும், என்விடியா ஹெச் 200 ஜிபியு தொழில்நுட்ப உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட உயா்திறன் கணினி மையமும், ஆராய்ச்சி, புதுமை, திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் பொறியியல், புவிசாா் பகுப்பாய்வு மற்றும் தொழில் துறை சாா்ந்த கற்றல் ஆகிய துறைகளில் தேசிய அளவிலான சிறப்பு மையங்களாக செயல்படும்.

இம்முயற்சிகள் கல்வி, தொழில் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்து, வளா்ந்து வரும் ஆழ்தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை பொறியியல் துறைகளுக்குத் தேவையான திறன் மிக்க மனிதவளத்தை உருவாக்கும் என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.