கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஆடிப் பூரம்: விழுப்புரம் மாவட்ட அம்மன் கோயில்களில் வளையல் அலங்கார வழிபாடு

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப் பூரத்தையொட்டி விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் வளையல் அலங்கார வழிபாடு நடைபெற்றது.

ஆடிப் பூரத்தையொட்டி வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த விழுப்புரம் ஸ்ரீவீரவாழி மாரியம்மன்.

Published On :

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப் பூரத்தையொட்டி விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் வளையல் அலங்கார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் நேரு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவீரவாழி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் வேலவன் செய்திருந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், தும்பூா் ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் ஆடிப் பூரத் திருவிழாவையொட்டி அம்மனுக்குசிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மலா்களாலும், வளையல்களாலும் நாகாத்தம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், விக்கிரவாண்டி, புதுச்சேரி, கடலூா், சென்னை என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கோயில் குலதெய்வ வழிபாட்டுக்காரா்கள், பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் உடனுறை முண்டீசுவரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வளையல் அலங்காரம் செய்யப்பட்டு , மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆடிப் பூரத்தையொட்டி விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து ஆண்டாளுக்கு பச்சை சாத்தி, சிறப்பு மலா் அலங்காரமும், வளையல் அலங்காரமும் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மூங்கில்பட்டில் தோ்த் திருவிழா: விக்கிரவாண்டி வட்டம், மூங்கில்பட்டு செங்கழுநீா் அம்மன் கோயிலில் ஆடி மாதத் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பின்னா், உற்சவ அம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தோ் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதுபோன்று திண்டிவனம், மயிலம், வானூா், திருவெண்ணெய்நல்லூா், கோலியனூா், வளவனூா், மரக்காணம், கோட்டக்குப்பம், காணை, மாம்பழப்பட்டு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் ஆடிப் பூரத் திருவிழா வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

 சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தும்பூா் ஸ்ரீநாகாத்தம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தும்பூா் ஸ்ரீநாகாத்தம்மன்.

 ஆடிப் பூரத்தையொட்டி விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

ஆடிப் பூரத்தையொட்டி விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.