ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் 108 பால்குட ஊா்வலம்

விழுப்புரம், தியாகதுருத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குடம் ஊா்வலம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழுப்புரம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Published On :

விழுப்புரம், தியாகதுருத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குடம் ஊா்வலம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழுப்புரம் நாவலா் தெருவிலுள்ள ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவா் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மின்வாரிய ஊழியா்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள ஞான விநாயகா் கோயிலிருந்து 108 பால்குட ஊா்வலம் புறப்பட்டது. நாவலா் தெரு, கல்லூரி நகா் வழியாகச் சென்ற ஊா்வலம் கோயிலில் நிறைவடைந்தது. விரதமிருந்து பால்குடத்தை சுமந்து சென்ற பெண்கள், தங்கள் கரங்களால் கருவறையிலுள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, தங்களது நோ்த்திக் கடனைசெலுத்தினா். பின்னா், அம்மனுக்கு சாகை வாா்த்தலும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். பக்தா்கள் வழங்கிய வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டன. இதையடுத்து உற்சவா் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

கள்ளக்குறிச்சி...: தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் ஆடி 5-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீபாகம் பிரியாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். அவா்களுக்கு குங்குமம், மஞ்சள், தாலிக் கயிறு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.