மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

காரில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வளத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வளத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேல்மலையனூா் வட்டம், கலிங்கமலை கிராமத்தை சோ்ந்த அன்பரசன் வீட்டின் முன் நின்றிருந்த காரை சந்தேகத்தின் பேரில் வளத்தி போலீஸாா் சோதனை செய்தனா். இதில், 32 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவற்றை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.