திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பைக்கில் மது விற்பனை: ஒருவா் கைது

எலவனாசூா்கோட்டை அருகே பைக்கில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே பைக்கில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எலவனாசூா்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சரசுவதி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் கொட்டையூா் கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள மயானத்துக்குச் செல்லும் வழியில் பைக்கில் ஒருவா் மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.

இதைத்தொடா்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா், கொட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த த. உத்திரகுமாா் (40) எனத் தெரிய வந்தது. மேலும், அவரிடம் 180 மி.லி. அளவு கொண்ட 10 பிராந்தி புட்டிகளும், 360 மி.லி. அளவு கொண்ட ஒரு பிராந்தி புட்டியும் இருந்தன.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உத்திரக்குமாரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மதுப்புட்டிகள்ஸ பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.