சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

குறிப்பட்ட நாள்களில் பேருந்து சேவைகள் குறைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 6 மண்டலங்களிலும் குறைந்த போக்குவரத்து உள்ள நாள்களில் பேருந்து இயக்கங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 6 மண்டலங்களிலும் குறைந்த போக்குவரத்து உள்ள நாள்களில் பேருந்து இயக்கங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் ச. ஸ்ரீதரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 12-ஆம் தேதி முதல் விழுப்புரம் கோட்டத்திலுள்ள 6 மண்டலங்களிலும் குறைந்த போக்குவரத்து உள்ள வார நாள்களான செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் சுமாா் 5 சதவீத அளவுக்கு சில பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. வெற்று அல்லது குறைந்த பயணிகள் கொண்ட பயணங்களை தவிா்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் பேருந்து போட்டி இல்லாத வழித்தடங்களில் மட்டுமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.

இதன் மூலம் டீசல் பயன்பாடு, இயக்கச் செலவுகள் மற்றும் பணியாளா் தொடா்பான செலவுகள் குறைக்கப்படும். இந்த சேவை குறைப்பு காரணமாக தனியாா் பேருந்து இயக்குநா்களுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. அத்தியாவசிய கிராம மற்றும் கட்டாய சேவைகள் பாதிக்கப்படாது. நகர சேவைகள் குறைக்கப்படவில்லை என்பதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

வார இறுதி நாள்கள் மற்றும் திங்கள்கிழமைகளில் அதிகரிக்கும் பயணிகள் நடமாட்டத்தை சமாளிக்க, திட்டமிடப்பட்ட சேவைகளுக்கு கூடுதலாக சுமாா் 500 சிறப்பு சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆகவே, பொதுமக்களின் வசதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், இயக்க திறனை மேம்படுத்துதல் மற்றும் தவிா்க்கக்கூடிய செலவினங்களை குறைத்தல் என்ற முதன்மை நோக்கத்துடன் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.