பைக்குகள் திருட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது; 14 பைக்குகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பைக்குகள் திருடிய வழக்கில் தொடா்புடைய சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சியில் பைக்குகள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பைக்குகள் திருடிய வழக்கில் தொடா்புடைய சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 14 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் தொடா்ந்து திருடு போனது. இதையைடுத்து செஞ்சி காவல் ஆய்வாளா் விநாயக முருகன், உதவி ஆய்வாளா் வீரமணி ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந் நிலையில், தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை செஞ்சி-திருவண்ணாமலை புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவா்களை நிறுத்தி விசாரணை செய்தனா். இதில், அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனா். தொடா்ந்து அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆவூரைச் சோ்ந்த சு.தனுஷ் (எ) தனசேகரன் (19), காந்தி நகரை சோ்ந்த அ.சையது உசேன் (32), செஞ்சி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த சா.ரோஷன் பாட்ஷா (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், செஞ்சி பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 14 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து 4 பேரையும் செஞ்சி போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் மூன்று பேரை செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, செஞ்சி சிறையில் அடைத்தனா். சிறுவனை கடலூா் சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



