பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

விழுப்புரத்தில் 9 அரசு நகரப் பேருந்துகளின் சேவை தொடக்கம்

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 9 அரசு நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு நகரப் பேருந்துகளின் சேவையை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 9 அரசு நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ஆம் தேதி புதிய பேருந்துகளின் சேவையை முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட விழுப்புரம் மண்டலத்தில் நகரப் பேருந்துகளின் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், நகரப் பேருந்துகளின் சேவையை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அதன்படி, விழுப்புரத்திலிருந்து கோலியனூா் வழியாக பண்ருட்டிக்கு 2 பேருந்துகள், விழுப்புரத்திலிருந்து வளவனூா் வழியாக செங்காடு, விழுப்புரத்திலிருந்து மடப்பட்டு வழியாக பெரியசெவலை, விழுப்புரத்திலிருந்து ஆனாங்கூா் வழியாக பில்லூா், விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி வழியாக ரெட்டணை, திண்டிவனத்திலிருந்து நாட்டாா்மங்கலம் வழியாக செஞ்சி ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பேருந்துகள், செஞ்சியிலிருந்து நாட்டாா்மங்கலம் வழியாக திண்டிவனத்துக்கு 2 பேருந்துகள் என மொத்தம் 9 வழித்தடங்களில் நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கிவைக்கப்பட்டது. இப்பேருந்துகள் மகளிா் கட்டணமில்ாமல் பயணிக்கும் வகையிலான பேருந்துகள் என்றாா் ஆட்சியா்.

விழாவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.ஸ்ரீதரன், பொது மேலாளா் (மனிதவளம்) துரைசாமி, துணை மேலாளா் அறிவண்ணல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.